<$BlogRSDURL$> <body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6591993\x26blogName\x3d%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+-+Thamizh+\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dTAN\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://damntest.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://damntest.blogspot.com/\x26vt\x3d-4789935341337601053', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
தமிழ் - Thamizh
Thursday, March 11, 2004
 
பதில்
To மாலன்

வலைப்பூவும் வலைஇதழும் தனக்கே உரிய குணங்களை கொண்டிருக்கிறது என்பதில் தெளிவு உள்ளது. தேங்காய் சீனுவாசன் குணாசித்திர வேடங்கள் ஏற்றதில்லையா?, ரஜினி காந்த் காமெடி செய்யவில்லையா?, கமலஹாசன் இயக்கவில்லையா? அதைப்போலத்தான் வலைப்பூக்களும் பல பரிமாணங்களில் பளிச்சிடுகிறது.

Weblog என்பது முழுமை அடைந்த தயாரிப்பல்ல. அது ஒரு செயலி (tool). துவரம் பருப்பை இரண்டு மிளகாய்களை கிள்ளிப்போட்டு வேகவைத்தும் சாப்பிடலாம், அரிசியுடன் சேர்த்து வேகவைத்து பருப்பு சாதமாகவும் சாப்பிடலாம், கொஞ்சம் காய்கறிகளை சேர்த்து சாம்பாராகவும் பரிமாறலாம், புளி தண்ணீரும் கொத்தமல்லி தழையும் சேர்த்து ரசமாகவும் குடிக்கலாம். இதனால் பருப்பு தன் காரெக்டரை இழந்துவிட்டது, அது சரியல்ல, நெறிமுறை படுத்த வேண்டும், பருப்பை தனியாக வேகவைத்தே சாப்பிடவேண்டும் என்று கூறுவது சரியாகாது. லைப்பூக்களும் அப்படிப்பட்ட ஒரு டூல், Ingredient.

Diversity என்பதற்கான உங்கள் விளக்கங்கள் அந்தந்த இடத்தை பொறுத்து மாறுபடும். இதில் அறியாமை, மக்குத்தனம் என்று எதுவும் இல்லை. இது முற்றிலும் தொழில்நுட்பம் ம்பந்தப்பட்ட விசயம், குறிப்பாக இணைய தொழில்நுட்பம் சம்மந்தப்பட்ட விஷயம். இரண்டு நண்பர்கள் தங்கள் கருத்தை பரிமாற்றிக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம் இன்று hotmailஆக விஷ்வரூபம் பெற்றதை நினைத்துப்பார்க்க வேண்டும். இரு கணினிகள் தகவல் பரிமாறிக்கொள்வதற்காக DARPA துவங்கிய ஒரு சிறிய முயற்சி இன்று நீங்களும் நானும் உரையாடிக்கொண்டிருக்கும் இணையவெளியாக (World wide web) மாற்றம் பெற்றுள்ளதே!. இரு கணினிகளை மட்டுமே பரிமாற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று அன்றே வரையறுத்திருந்தால், இணையம் என்ற ஒன்றை நாம் கனவிலும் கண்டிருக்கமுடியாது. வலைப்பூக்கள் என்பது ஒரு குழந்தை. இப்போதுதான் ஒரளவிற்கு தன்னை அடையாளம் காணத்துவங்கியிருக்கிறது. அதுவும் தமிழ் வலைப்பூக்கள் இப்போதுதான் பிரசவித்த குழந்தை. பயம் தெளிந்து இப்போதுதான் ட்ராக் பேக், பெர்மா லிங்க் என்று ஒவ்வொரு தடையாகத்தாண்டி ஒவ்வொருவராக தொட்டு, தூக்கி பரிச்சயமாகி கொண்டுவருகிறார்கள். இப்போதுபோய் வரையறை, நெறிமுறை என்று பயமுறுத்தினால் வலைப்பூத்தொடுப்பாளர்கள் அதிலிருந்து விலகிவிடும் அபாயம் உள்ளது.

Infancyஐக்கூட எட்டாத ஒரு குழந்தையிடம் ஸ்டெதஸ்கோப் கொடுத்து டாக்டராக உருவாகவேண்டும் என்று வளைக்கமுயற்சி செய்வது அதன் ஆதார வளர்ச்சியை கட்டிபோட்டுவிடும். வலைப்பூக்கள் தன் பிஞ்சுக்கரங்களை நீட்டி ஒவ்வொரு துறையிலும் நுழைந்து பார்க்கத்தான் செய்யும். வயது ஏற எற பக்குவம் அடைந்து தன் பாதையையும், இலக்கையும் அதுவே நிர்ணயித்துக்கொள்ளும். தேவையில்லாத துறைகளில் இருந்து தானே விழகியும் விடும். மேலும் வலைப்பூ வளர்ச்சி என்பது வாசகனையும் பொறுத்ததுதான். ஒரு வாசகன் வலைப்பூக்களில் விவாதங்களை எதிர்பார்த்து வந்தானாலால், அதையும் ஒரு வலைப்பூ தொடுப்பாளன் கொடுக்கவேண்டும், அல்லது அவ்வாறான வலைப்பூக்களை அவன் தேடி செல்வான்.

மரத்தடி இணையபக்கம் என்னைப் பொறுத்தமட்டில் தேடிக்கண்டுபிடிக்க உதவும் என்பதற்காகவே துவங்கப்பட்டதாக கருதுகிறேன். யாஹ¥ குழுமங்களில் தேடு வசதி மிகவும் தொன்மையானதாக உள்ளது. உதாரணத்திற்கு ஜேபி எழுதிய ஒரு மடலை அகத்தியரில் தேடிப்பிடிக்க மிகவும் சிரமப்படவேண்டியுள்ளது. ஆனால் யாஹ¥ தன் தேடு வசதியை மேம்படுத்திவிட்டால் இணையப்பக்கத்தின் தேவை இல்லாதுபோகும். உதாரணத்திற்கு மரத்தடியில் வரும் கவிதை, கட்டுரை, வெண்பா போன்றவற்றிற்கு மாடரேட்டர் சரியான தலைப்பிட்டு வெளியிடுகிறார் என வைத்துக்கொள்வோம். யாஹ¥வின் தேடு வசதியின் மூலம் மாலன் மார்ச் மாதம் எழுதிய கட்டுரைகளை கண்டுபிடி என்று ஆணையிட்டுவிட்டால் போதும், வந்து விழும் மாலனின் மார்ச் மாத கட்டுரைகளில் இருந்து எனக்கு தேவையானதை பொறுக்கி எடுத்துக்கொள்ளலாம். அவ்வாறான வசதி இல்லாததால்தான் தனி இணைய பக்கம் அவசியமாகிறது.

இணைய இதழ்களும் அதைப்போலவே செயல்பட ஆரம்பிக்கலாம். உதாரணமாக இணைய இதழ்களில் வெளியிடப்படும் படைப்புகளுக்கு அதிலேயே பின்னூட்டம் அளிக்கும் வசதி செய்துதரலாம். தனிவிவாத களம் அமைக்கலாம். outlookindia.com இணையதளத்தில் இது பல ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் O'Reilly பதிப்பாளர்கள் தங்கள் இணையதளத்தில் பல்வேறுபட்ட தொழில் சம்பந்தமான ப்ளாக்களை (http://www.oreillynet.com/pub/q/webloggers) வெளியிடுகிறார்கள்.


வலைப்பூக்கள் முன்னேற்றப்படவேண்டும் என்பதில் எனக்கும் எந்த மாற்றுக்கருத்துமில்லை, ஆனால் வரைமுறை அமைத்து அதனுள் வளரவேண்டும் என்பதை கிரகிக்க சிரமமேற்படுகிறது.

-டைனோ


http://news.google.com Powered by Blogger Site Meter